Friday, September 12, 2014

LATIHAN BT CUTI SEKOLAH TAHUN 4 ROS

அன்பு வணக்கம் மாணவர்களே! அனைவருக்கும் விடுமுறை வாழ்த்துகள்.
விடுமுறை காலப் பயிற்சிகளை செய்து வரவு.
பிரிவு 1; வாக்கியம் அமை

1. வலம் = கோயிலைச் சுற்றி வலம் வருதல்.
2. வளம் = செடிகள் வளமாக வளர உரம்.
3. வலை= வலை வீசி மீன் பிடித்தல்
4. வளை= வளைவான பாதை/ வளைத்துப் பிடித்தல்.
5. மூலை= அறையின் மூலை/ வீட்டின் மூலை
6. மூளை=மனிதனின் மூளை

பிரிவு 2; திறந்த முடிவு கட்டுரை

1. நூலகத்தின் பயன்

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.
    நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும் நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
   நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.
   “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.
   தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.
நன்றி; bahasatamilupsr
2.நான் ஒரு மிதிவண்டி (கட்டுரை எழுதுக)
முன்னுரை
  • விடுகதையாக அறிமுகம் செய்தல்
  • சிறுவர்கள்/ மாணவர்கள் விரும்பிப் பயன்படுத்துவர்
  • ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வேன்.
கருத்து 1
  • பெயர், பிறப்பு, வடிவம், நிறம் போன்றவற்றை குறிப்பிடுதல்.
  • நிறைய நண்பர்கள்
கருத்து 2
  • ஏற்றுமதி
  • துறைமுகம் ( கிள்ளான்/ பாசீர் கூடாங் )
  • மிதிவண்டியை கடைக்குக் கொண்டு செல்லுதல்
கருத்து 3
  • கடையின் உரிமையாளர் பார்வைக்கு வைத்தல்
  • விலை பட்டியல் ஒட்டுதல்
  • ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்தல்
கருத்து 4
  • சிறுவன் ஒருவன் தன் பெற்றோரிடம் அடம்பிடித்தல்
  • அப்பெற்றோர் பணம் கொடுத்து வாங்குதல்
  • கண்ணும் கருத்துமாய் பயனபடுத்துதல்
 கருத்து 5
  • ஏற்பட்ட அனுபவம்
  • மறக்க முடியாத அனுபவம்
முடிவு
  • இன்றைய நிலை 
  •    இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
நான் ஒரு காலணி
       கண் விழித்தேன். கண்கள் என் உரிமையாளரைத் தேடின. ஒரே இருட்டு. என் நெஞ்சம் பயத்தால் படபடத்தது. இருட்டிலிருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும் என்று தவித்தேன். அங்கும் இங்கும் முட்டிக் கொண்டேன். நான் குப்பைத் தொட்டினுள் இருப்பதை உணர்ந்தேன். என் நினைவலைகள் கரைபுரண்டோடுகின்றன. என் கதையை உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன். நான் ஒரு காலணி. நான் மலேசியாவில் ஷா ஆலமில் பிறந்தேன். என் பெயர் அடிடாஸ். மல்லிகைப் பூ போன்று வெள்ளை நிறத்தில் அடிபட்டு, குத்துப்பட்டு உருவாக்கப்பட்டேன்.
   அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன் அடைக்கப்பட்டிருந்தேன் என்ற மகிழ்வு ஒருபுறம். என்னுடன் ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். ஒரு நாள், ஷா ஆலமிலிருந்து குளுவாங் எனும் ஊருக்கு ஒரு கனரக வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டோம். அங்கு ஒரு பெரிய கடையில் எங்களை இறக்கினார்கள். அக்கடைக்காரர் எங்களைக் கண்ணாடி அலமாரியில் முறையாக அடுக்கி வைத்தார். அந்தக் கடைக்குப் பலர் வந்து சென்றனர். இப்படியே பல நாட்கள் ஓடின. நான் மிகவும் மகிழ்ச்சியாக என் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்.
    ஒரு நாள், ஒரு சிறுமி தன் தாயுடன் அங்கு வந்தாள். என்னைக் கூர்ந்து நோக்கினாள். தன் தாயின் காதில் கிசுகிசுத்தாள். அவர் அந்தக் கடைக்காரரிடம் என்னைச் சுட்டிக் காட்டி என் மதிப்பை விலை பேசினார். இறுதியில், என்னை விலைகொடுத்து வாங்கினார். என் கன்னத்தில் ஏதோ வழிந்தோடியது போல் இருந்தது. தொட்டுப் பார்த்தேன். சந்தேகமில்லை. அஃது என் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர்தான். என் சகோதரிகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் கவலையுடன் அச்சிறுமியுடன் சென்றேன். என் உரிமையாளரின் அரவம் கேட்டு நான் எண்ண அலைகளிலிருந்து விடுபட்டேன்.
  என் உரிமையாளர் ஒவ்வொரு புதன்கிழமையும் என்னைத் தரமான ஷாம்புவால் குளிப்பாட்டுவார். வெள்ளைப் பூசி என்னை வெயிலில் உலர வைப்பார். இதமான வெயிலின் ஒளியில் நான் குளிர்காய்ந்து கொண்டிருப்பேன். நான் எப்பொழுதும் தூய்மையாக இருப்பேன். என் உரிமையாளர் என்னை எங்குச் சென்றாலும் என்னைத் தம் காலில் அணிந்து கொள்வார். நானும் அவருக்கு இரவு பகல் பாராமல் உழைத்தேன்.
      எனக்கு வயது ஏறிக்கொண்டே போனது. வயதானதால் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதை என் எஜமானியான அச்சிறுமி கவனித்தார். நான் இன்னும் பல நாட்களுக்கு உழைக்க மாட்டேன் என்று முடிவு செய்து அருகில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் வீசினார். அவர் என்னை வீசிய வேகத்தில் என் தேகம் முழுவதும் காயம்பட்டு, வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்தீர்களா என் பரிதாப நிலையை!

நான் ஒரு பென்சில்.
       சிறுவர் முதல் முதியவர் வரை என்னை எழுதப் பயன்படுத்துகிறார்கள். என் பெயர் 2B. என்னைப் பொதுவாக பென்சில் என்று குறிப்பிட்டாலும் எனக்குச் சிறப்பாகப் பல பெயர்கள் இருக்கின்றன. அவை ஸ்தெட்லர், பைலெட்  போன்றவையாகும்.
       நான் ஜெர்மனி  நாட்டுத் தொழிற்சாலை ஒன்றில் பிறந்தேன். என்னைப் போலவே அயிரக்கணக்கானாவர்கள் அங்கே தயாராகி உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அங்கிருந்து கப்பல் வழியாக பினாங்குத் துறைமுகத்தை வந்தடைந்தேன்.
      ஒரு வியாபாரி என்னையும் என் உடன் பிறப்புகளையும் வரவழைத்திருந்தார். எங்களை அவரது கடைக்கே கொண்டு வந்து வாடிக்கையாளார்களிடம் பேரம் பேசி விற்று விட்டார்.மலாக்காவிலுள்ள ஒரு கடையில் பல நண்பர்களுடன் சேர்த்து விற்பனைக்கு வைத்துவிட்டார். பல இனத்தவர்கள் அன்றாடம் எங்களைப் பார்த்துப் பூரிப்படைவர்.
    ஒரு நாள் திரு.சுரேஷ் என்னை வாங்கி தன் மகன் பாலாவிற்குப் பரிசாகக் கொடுத்தார். பாலா என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.ஒவ்வொரு நாளும் என்னைப் பயன்படுத்துவார். என் பசிக்கு உணவாக அவ்வப்போது மை கொடுப்பார். ஒரு நாள் சிவா கவனக் குறைவாக என்னைத் தன் மேசை மீது வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். அவ்வமையம் தற்செயலாக அங்கு வந்த பாலாவின் தம்பி மேசை மீதிருந்த புத்தகத்தை எடுக்க முயன்ற போது நானும் அதோடு உருண்டு வந்து கீழே விழுந்தேன். அவ்வளவுதான் என் உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டு நான் விகாரமாகக் காட்சியளித்தேன். பாலா என்னைப் பார்த்து முகம் சுழித்தான். பெருமூச்சு விட்டான். இன்னும் அங்கேயே கேட்பாரற்றுக் கிடக்கின்றேன்.




நான் உருவாக்க விரும்பும் அதிசய மிதிவண்டி



        மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஓர் ஆசை இருக்கும். அதே போல் எனக்கும் ஓர் சிறிய ஆசை உண்டு. அது என்னவென்றால் நான் விரும்பும் ஓர் அதிசய மிதிவண்டியை உருவாக்குவதுதான்.மிதிவண்டியை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், நான் ஒரு விநோத மிதிவண்டியை உருவாக்க விரும்புகிறேன். அம்மிதிவண்டியைப் பற்றி அனைவரும் பேசுவர். அம்மிதிவண்டிக்கு பல விநோதத் தன்மைகள் இருக்கும்.
       நான் உருவாக்கும் மிதிவண்டிக்குப் பறக்கும் ஆற்றல் இருக்கும். அம்மிதிவண்டியில் உள்ள விசையை அழுத்தினால் சுயமாக இரண்டு இறக்கைகள் வெளிவரும். அது அதிவேகமாக செல்லக்கூடியதாக இருக்கும். தேவைக்கேற்ப வேகத்தைக் குறைக்கவும், கூட்டவும் முடியும். அதனால், நெடுந்தூரப் பயணம் செய்ய முடியும். உதாரணத்திற்கு, அம்மிதிவண்டியைக் கொண்டு, நான் இந்த மலேசியத் திருநாடு முழவதும் பறந்து செல்வேன் மற்றும் ஸ்பேயின், ஜப்பான், இந்தியா, அமேரிக்கா, ரஸ்யா போன்ற நாடுகளை ஒரி வலம் வந்து உலக சாதனைப் படைப்பேன்.அம்மிதிவண்டியின் மூலம், நம் நாட்டின் அழகிய காட்சிகளைக் கண்டு இரசிப்பேன் அதோடு இம்மிதிவண்டியைக் கொண்டு விண்வெளிக்குச் செல்லும் எனது கனவை நினைவாக்கிக் கொள்வேன்.
     அதுமட்டுமின்றி, எனது மிதிவண்டி கேட்கும் தன்மையும், பேசும் தன்மையுடையதாகவும் உருவாக்குவேன். இம்மிதிவண்டிக்கு “ஜிபிஎஸ்”  எனும் கருவியே தேவையில்லை. நாம் செல்லவிருக்கு இடத்தை கூறினால் போதும், அதனை கிரகித்துக் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்குச் சுலபமாக கொண்டு சேர்த்துவிடும். உதராணமாக, நான் கோலாலம்பூரிலுள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் அதற்கேற்ப அவ்விடத்தைக் கிரகித்துக் கொண்டு செல்லும் வழியில் உள்ள இடத்தையும் , சரியான பாதையையும் நமக்கும் கூறிக்கொண்டே செல்லும். இதன் மூலம் நாம் செல்லும் வழியில் உள்ள அனைத்து இடத்தையும் தெரிந்துக் கொள்வதுடன் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தையும் அடைய முடியும்.
    அதிசயங்கள் நிறைந்திருக்கும் இம்மிதிவண்டியில் உருமாறும் சக்தியும் அடங்கியுள்ளது. அம்மிதிவண்டி செல்லக்கூடிய இடங்களை அறிந்து அதற்கேற்ப தன்னை உருமாற்றிக் கொள்ளும். இம்மிதிவண்டி வானத்திற்கு செல்லும் பொழுதும் , கடலுக்கடியில் செல்லும் பொழுதும் தன்னுடைய உடலை தேவைக்கேற்ப உருமாற்றிக் கொள்ளும்.உதாரணமாக,வானத்திற்கு செல்லும் போது இறக்கைகள் விரித்து பறந்து செல்லும் மற்றும் கடலுக்கடியில் செல்லும் போது சுற்றிலும் கண்ணாடிப் பேழையாக உருவெடுக்கும். அதனால், கடலுக்கடியில் உள்ள இயற்கைக் காட்சிகளையும் நாம் இரசிக்க முடியும்.
    இம்மிதிவண்டி மறையும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும். இக்காலகட்டங்களில் திருட்டிச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆதலால், இத்தன்மையை உடைய இம்மிதிவண்டி தன்னை மறைத்து தற்காத்துக் கொள்ளும்.இத்தகைய மிதிவண்டியை உருவாக்க நான் சிறந்து படிப்பேன். அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாகி இம்மிதிவண்டியை உருவாக்குவேன்.
பிரிவு இ; வழிகாட்டிக்  கட்டுரை

மாதிரி விடை இங்கே சொடுக்கவும்

No comments:

INTERNATIONAL DIGITAL INNOVATION AND INVENTION CHALLENGE IDIIC 2021 WONS GOLD MEDAL/ சர்வதேச டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கோர் தமிழ்ப்பள்ளிக்குத் தங்கம்!!!

  இரண்டாவது முறையில் பங்கோர் தமிழ்ப்பள்ளி மாணவர்களான செல்வி ம.கார்த்திஷா, செல்வி க.திவ்யாஷினி மற்றும் செல்வி க.டியானா ஆகிய மூவரும் பசுமை தொழ...