Tuesday, June 15, 2021

INTERNATIONAL DIGITAL INNOVATION AND INVENTION CHALLENGE IDIIC 2021 WONS GOLD MEDAL/ சர்வதேச டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கோர் தமிழ்ப்பள்ளிக்குத் தங்கம்!!!

 


இரண்டாவது முறையில் பங்கோர் தமிழ்ப்பள்ளி மாணவர்களான செல்வி ம.கார்த்திஷா, செல்வி க.திவ்யாஷினி மற்றும் செல்வி க.டியானா ஆகிய மூவரும் பசுமை தொழில்நுட்பத்தை நோக்கி E.F.T (Environmental Friendly Cooler) எனும்  புத்தாக்கக் கண்டுபிடிப்பில் புதுமை ஏற்படுத்தி சர்வதேச அளவில் தங்கம் வென்று பள்ளிக்கும் பங்கோர் வாழ் தமிழருக்கும் பெருமை ஈட்டித் தந்துள்ளனர்.அறிவியல்  ஆசிரியை திருமதி சரஸ்வதி தலைமை பொறுப்பு ஏற்றதோடு புறப்பாட ஆசிரியை திருமதி கிருஷ்ணவேணி மற்றும் ஆங்கில ஆசிரியை திருமதி விசாலாட்சி ஆகியோர் ஒருசேர மாணவகளுக்கு மூன்று மாதப் பயிற்சியும் ஆக்கமும் வழங்கியதனால் இவ்வாண்டு உலக அளவில் மாபெரும் மகத்தான சாதனை  தடம் பதித்தது பங்கோர் தமிழ்ப்பள்ளி. பள்ளித் தலைமயாசிரியர் திருவாளர் ர.சுப்பிரமணியம் அவர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கம், உற்சாகம் மற்றும் ஆய்விற்கு தேவையான ஆலோசனை, போட்டியில் பங்கெடுக்க அனுமதி வழங்கினார்.அதோடு பிற ஆசிரியர்களும் பெருந்துணையாக இருந்து அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கினர் என்பது குறிபிடத்தக்கது.பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஆய்வு மேற்கொள்வதற்கு போதிய பண உதவியும் ஊக்கமும் வழங்கினர்.சதனை புரிய அனைத்துத் தரப்பினருக்கும் பள்ளி நிர்வாகம் நன்றி கூறக் கடமைபட்டுள்ளது.

No comments:

INTERNATIONAL DIGITAL INNOVATION AND INVENTION CHALLENGE IDIIC 2021 WONS GOLD MEDAL/ சர்வதேச டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கோர் தமிழ்ப்பள்ளிக்குத் தங்கம்!!!

  இரண்டாவது முறையில் பங்கோர் தமிழ்ப்பள்ளி மாணவர்களான செல்வி ம.கார்த்திஷா, செல்வி க.திவ்யாஷினி மற்றும் செல்வி க.டியானா ஆகிய மூவரும் பசுமை தொழ...