மாதிரிக் கதை ........!!!!
===================================================================

கதையின் தொடக்கம் - UPSR KERTAS 2
கதையிலிருந்து ஒரு மாணவனின் கதையை வித்தியாசப்படுத்திக் காட்டும். மேற்கண்ட
படத்திற்கு எப்படியெல்லாம்தொடக்கத்தை எழுதலாம் எனப் பார்ப்போம்.தொடக்கம் 1அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில்
உறைந்து போனார்கள்.
உறைந்து போனார்கள்.
கமலாவின் கைகள் நடுங்கின. கமலா ‘ஆ!” என்றே கத்திவிட்டாள். அம்மா அப்பாவின் தோள்
பட்டையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல்
அனைவரும் விழித்துக் கொண்டிருந்தார்கள்.
தொடக்கம் 2மணி 11-ஐ நெருங்கியிருந்தது. கமலா வழக்கமாக இரவில் தாமதமாகத்தான்
படுப்பாள்.கமலா கெட்டிக்காரி மாணவி. இரவில்வெகுநேரம் கதைப்புத்தகங்களை
வாசிக்கக்கூடியவள். ஆசிரியர் கொடுத்த பாடங்களை முடித்து விட்ட பிறகே அறை
சன்னலைச் சாத்துவாள். அன்றும் சன்னலைச் சாத்துவதற்காகச் சென்றாள்.
தொடக்கம் 2மணி 11-ஐ நெருங்கியிருந்தது. கமலா வழக்கமாக இரவில் தாமதமாகத்தான்
படுப்பாள்.கமலா கெட்டிக்காரி மாணவி. இரவில்வெகுநேரம் கதைப்புத்தகங்களை
வாசிக்கக்கூடியவள். ஆசிரியர் கொடுத்த பாடங்களை முடித்து விட்ட பிறகே அறை
சன்னலைச் சாத்துவாள். அன்றும் சன்னலைச் சாத்துவதற்காகச் சென்றாள்.
அப்பொழுது...
*****************************************************
மெதுபயில் மாணவர்களுக்கென ஒரு சில கதை வர்ணனைகளை சூழலுக்கேற்ப எல்லா வழிகாட்டிக் கட்டுரைக்கும் பயன்படுத்தலாம்:
காலை நேரம்
கிழக்கில் சூரியன் உதித்ததும் இலைகளில் தங்கியிருந்த பனித்துளிகள் மெல்ல மறையத் துவங்கின. சூரியனின் ஒளிக்கதிர்கள் வானத்தைப் பிளந்து கொண்டு கண்களில் பாய்ந்தன. கொக்கரக்கோ என்ற சேவலின் உரத்த கூவல் பொழுது விடிந்ததை உணர்த்தியது. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
மதிய நேரம்
உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கொப்ப அந்நேரத்தில் நிழலைத் தேடியே பலரின் கால்கள் நடைப்போட்டன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
மாலை நேரம்
மேற்கில் வெயில் மறைந்து கொண்டிருந்த நேரம். சூரியன் தன் முகத்தை ஒளித்துக் கொண்டிருந்தது. வானத்திலிருந்து இருள் மெதுவாக இறங்கியது.(மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
இரவு நேரம்
நிசப்தமான நேரம். பரந்து விரிந்திருந்த வான் முழுவதும் விண்மீன் கூட்டங்கள் பெரியவையும் சிறியவையுமாய் நிறைந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. வெளிச்சம் மங்கிய வேளையில் காயும் நிலா ஒளி எங்கும் பரவியிருந்தது. இரவு பூச்சிகளின் ரீங்காரம் இனிமையான இசையைப் போல கேட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
திடல்
விசாலமான புல்வெளி. கருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது. சிந்திய பனித்துளிகளை தன் நுனி உடம்பில் வைத்திருந்தன பச்சை நிறப் புற்கள். தன் கடமையினை நேரந்தவராது செய்யும் கதிரவன் அடிவானிலிருந்து சமூகளிக்கிறான் . கதிரவனைக் கண்டதும் பனித்துளிகள் எங்கோ ஓடி மறைந்தன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
வகுப்பறை
மாணவர்கள் அனைவரும் அவரவர் வேளையில் மூழ்கியிருந்தனர். முகிலன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மாணவர்களின் புத்தகப்பை அனைத்தும் வாய்ப் பிளந்து கிடந்தன. (மூலம்: BAHAN P&P KSSR DAN KBSR FB)
சாலை
வாகனங்களின் ‘பீங்ங்ங்ங்’ எனும் ஹார்ன் சத்தம் எங்கும் எதிரொலித்தது. வாகனங்கள் இரயில் போல வரிசையாகச் சென்று கொண்டிருந்தன.
No comments:
Post a Comment