Tuesday, October 7, 2014

காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது.[1].விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10) [2] உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த்தனையாக உள்ளது.

காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும்

காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.[3]
உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.
ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. [4]
காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்; 153)பின்வருமாறு பாடியுள்ளார்.
"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"

No comments:

INTERNATIONAL DIGITAL INNOVATION AND INVENTION CHALLENGE IDIIC 2021 WONS GOLD MEDAL/ சர்வதேச டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கோர் தமிழ்ப்பள்ளிக்குத் தங்கம்!!!

  இரண்டாவது முறையில் பங்கோர் தமிழ்ப்பள்ளி மாணவர்களான செல்வி ம.கார்த்திஷா, செல்வி க.திவ்யாஷினி மற்றும் செல்வி க.டியானா ஆகிய மூவரும் பசுமை தொழ...